/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சென்டர் மீடியனில் மேய்ந்த மாடு காரில் மோதி விபத்து
/
சென்டர் மீடியனில் மேய்ந்த மாடு காரில் மோதி விபத்து
சென்டர் மீடியனில் மேய்ந்த மாடு காரில் மோதி விபத்து
சென்டர் மீடியனில் மேய்ந்த மாடு காரில் மோதி விபத்து
ADDED : ஜூன் 19, 2024 05:00 AM

விருதுநகர் : விருதுநகர் ஆர்.ஆர்., நகர் அருகே நான்குவழிச்சாலை சென்டர் மீடியனில் மேய்ந்த மாடு ரோட்டை கடக்கும் போது பா.ஜ., மாவட்ட பார்வையாளர் காரில் மோதி விபத்துக்குள்ளானது.
விருதுநகர் மாவட்ட பா.ஜ., பார்வையாளர் வெற்றி வேல். இவர் சாத்துார் சென்று விட்டு விருதுநகருக்கு வருவதற்காக நான்கு வழிச்சாலையில் ஆர்.ஆர்., நகர் அருகே காரில் நேற்று மதியம் 2:00 மணிக்கு வந்தார். அப்போது சென்டர் மீடியனில் வளர்ந்த புல்களை மாடு மேய்ந்து விட்டு மேற்கு பக்கம் செல்வதற்காக ரோட்டை கடந்தது. வேகமாக வந்த கார் மாட்டின் மீது மோதியதில் கால்கள் முறிந்து காயமடைந்து எழுந்து நிற்க முடியாமல் இருந்தது. காரின் முன்பக்கம் முழுவதும் சேதமாகி விபத்துக்குள்ளானது. வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.