/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி
/
நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி
ADDED : ஆக 28, 2024 05:51 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நத்தம்பட்டியில் நான்கு வழிச்சாலையில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதை கவனிக்காமல் வந்த லாரி லோடுடன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
விருதுநகரை சேர்ந்தவர் துரைப்பாண்டியன்,38, இவர் நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் இருந்து மளிகை பொருட்களை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு கேரளா சென்றார்.
நேற்று அதிகாலை 3:30 மணிக்கு நத்தம்பட்டி அருகே வடுகபட்டி விலக்கு அருகே வரும்போது, நான்கு வழிச்சாலை ரோடு விரிவாக்க பணிக்காக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதை கவனிக்காமல் வந்த நிலையில், லோடுடன் கவிழ்ந்து லாரி விபத்திற்குள்ளானது. டிரைவர் துரைப்பாண்டியன் காயமின்றி தப்பினார். நத்தம்பட்டி போலீசார் விசாரித்தனர்.
இந்த இடத்தினருகே உள்ள மூவரை வென்றான் அர்ஜுனா நதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் விழுந்து தேனி மாவட்டம் போடி பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருவர், கடந்த வாரம் பலியாகினர். எனவே, இந்த இடத்தில் விபத்து முன்னெச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.