/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சி மயானத்தில் பராமரிப்பு இல்லாத கழிப்பறை
/
நகராட்சி மயானத்தில் பராமரிப்பு இல்லாத கழிப்பறை
ADDED : மே 01, 2024 07:44 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி மயானம் குப்பை கொட்டும் கோடவு னாகவும், கழிப்பறைகள் பராமரிப்பு இன்றியும் உள்ளது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் நகராட்சி மயானம் உள்ளது. இங்கு அடக்கம் செய்ய, எரியூட்ட வசதிகள் தனி தனியாக உள்ளது.
தகன மேடைகளின் கூரைகள் பெயர்ந்தும், சேதமடைந்தும் உள்ளன. இதுதவிர எரிவாயு தகன மேடையும் உள்ளது. ஆனால் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் இறுதி சடங்கு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பாழடைந்த கட்டடங்கள் உள்ளன. மயானம் முழுவதும் புதர் காடுகளாக உள்ளது. காலியான கட்டடத்தில் குப்பை, கழிவுகளை கொட்டும் கோடவுனாக மாற்றி விட்டனர். இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றம் மயானம் முழுவதும் வீசுகிறது. இறுதி சடங்கு செய்ய வருகிறவர்கள் முகம் சுளிக்கின்றனர். போதுமான மின்விளக்கு, தண்ணீர் வசதி இல்லை. கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி உள்ளது. மயானத்தில் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளனர். நகராட்சி இதற்கு எவ்வாறு அனுமதி அளித்தது என்பது குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியும் நகராட்சி கண்டு கொள்ள வில்லை. மயானத்தை சுத்தமாக, தேவையான வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.