ADDED : ஜூன் 09, 2024 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.டி., ரெட்டியபட்டியில் மகளிர் சுகாதார வளாகம் செயல்படாததால் பெண்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.டி., ரெட்டியபட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது வீணாக உள்ளது. சுகாதார வளாகத்தைச் சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்துள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் திறந்தவெளியினை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.