/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொதிகை ரயிலில் திருட்டு மதுரையை சேர்ந்தவர் கைது
/
பொதிகை ரயிலில் திருட்டு மதுரையை சேர்ந்தவர் கைது
ADDED : மார் 10, 2025 04:24 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவகாசி வந்த ஐ.டி. கம்பெனி ஊழியரின் பேக் திருடப்பட்ட சம்பவத்தில் மதுரையை சேர்ந்த பாலமுருகன் 31, என்பவரை ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சிவகாசியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் 43, சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பிப். 7 இரவு சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிவகாசி வந்துள்ளார். ஸ்டேஷனில் இறங்கும்போது ஐபேட் வைத்திருந்த பேக் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் விசாரித்தனர். இதில் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பாலமுருகன் 31, சம்பவ நாளன்று மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பொதிகை ரயில் வரும்போது, ரயிலில் ஏறி பேக்கை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பாலமுருகனை கைது செய்த போலீசார், ராஜபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விருதுநகர் சிறையில் அடைத்தனர்.