/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழையில் சேரும், சகதியுமான போலீஸ் ஸ்டேஷன் ரோடு மக்கள் பரிதவிப்பு
/
மழையில் சேரும், சகதியுமான போலீஸ் ஸ்டேஷன் ரோடு மக்கள் பரிதவிப்பு
மழையில் சேரும், சகதியுமான போலீஸ் ஸ்டேஷன் ரோடு மக்கள் பரிதவிப்பு
மழையில் சேரும், சகதியுமான போலீஸ் ஸ்டேஷன் ரோடு மக்கள் பரிதவிப்பு
ADDED : ஜூலை 16, 2024 04:23 AM

விருதுநகர் : விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோடு மழையில் சேரும், சகதியுமாக மாறி இருப்பதால் ஸ்டேஷனுக்கு செல்ல முடியாமல் போலீசாரும், வீடுகளுக்கு செல்ல முடியாமல் மக்களும் பரிதவித்து வருகின்றனர்.
விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் புறநகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. இங்கு ஏற்கனவே புகார் தெரிவிக்க வருபவர்கள் ரோடு தெரியாமல் அப்பகுதியில் கேட்டு கேட்டு செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடுகள் மண் ரோடுகளாக உள்ளது. இதனால் நேற்று பெய்த மழையில் சேரும், சகதியுமாகி குடியிருப்புகளுக்கு நடந்து, சைக்கிள், டூவீலரில் செல்ல முடியாமல் மக்கள் திண்டாடினர். இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு பணிக்கு செல்பவர்கள் ரோட்டில் செல்லும் போது கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனிற்கு செல்லும் ரோட்டை உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.