/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருவிழாக்கள் முடிந்தும் பலன் தரும் செண்டுப்பூ விளைச்சல்
/
திருவிழாக்கள் முடிந்தும் பலன் தரும் செண்டுப்பூ விளைச்சல்
திருவிழாக்கள் முடிந்தும் பலன் தரும் செண்டுப்பூ விளைச்சல்
திருவிழாக்கள் முடிந்தும் பலன் தரும் செண்டுப்பூ விளைச்சல்
ADDED : ஆக 24, 2024 03:25 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் எல்லா பருவகாலங்களில் கைகொடுக்கும் செண்டுப்பூவால் விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
விவசாயிகளின் விளைச்சலை நீர் பற்றாக்குறை, பருவம் தப்பிய மழை, சூறைக்காற்று போன்றவை பதம் பார்க்கின்றன. இருப்பினும் ஒரு சில பயிர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்றன.
விருதுநகர் மெட்டுக்குண்டு, ஆலங்குளம், ராஜபாளையம், தளவாய்புரம், எரிச்சநத்தம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் கிணற்று நீர் பாசனம் மூலம் செண்டு பூ விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நாட்டு செண்டு பூ 70 நாட்களில் சாகுபடி செய்யப்படுகின்றன.
பெரும்பாலும் பென்ஸ்டால் ரக செண்டு பூக்கள் பயிரிடப்படுவதால், அவை 40 நாட்களில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை முக்கிய முகூர்த்த மாதங்களை எதிர்நோக்கி பயிரிடப்படுவதால், முக்கிய முகூர்த்த மாதங்களான மே, ஜூனில் கோடையால் ஏற்படும் நீர் வறட்சியால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
இருப்பினும் கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் மழை அவ்வப்போது பெய்வதால் நன்கு விளைச்சல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது மாவட்டத்தின் எல்லா பகுதிகளில் மாலை நேர மழை பெய்வதால் விளைச்சலில் பிரச்னை ஏதுமில்லை.
இதனால் செண்டு பூவானது விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளுக்கு ரூ.30 லிருந்து ரூ.40 வரை விற்கப்படுகிறது.
ஆடித்திருவிழா நேரங்களில் ரூ.40 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது தேய்பிறை காரணமாகவும், விழாக்கள் முடிந்துள்ளதால் ரூ.20 முதல் 30 வரை விற்கப்படுகிறது.மூகூர்த்த நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

