ADDED : ஆக 18, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : மேற்கு வங்காளத்தில் பயிற்சி டாக்டர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து அருப்புக்கோட்டை மரக்கடை பஸ் ஸ்டாப் அருகேபா.ஜ., மகளிர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி காளீஸ்வரி தலைமை வகித்தார். மகளிர் அணி நிர்வாகிகள் தங்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கொலை செய்யப்பட்ட பயிற்சி டாக்டருக்கு அஞ்சலி செலுத்தினர். கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட பொதுச்செயலாளர் சீதாராமன், துணைத்தலைவர் ராஜேஸ்வரி மற்றும் நகர ஒன்றிய அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

