/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒரே நாளில் 6 பேரை கடித்த தெரு நாய்; மெத்தனத்தில் நகராட்சி
/
ஒரே நாளில் 6 பேரை கடித்த தெரு நாய்; மெத்தனத்தில் நகராட்சி
ஒரே நாளில் 6 பேரை கடித்த தெரு நாய்; மெத்தனத்தில் நகராட்சி
ஒரே நாளில் 6 பேரை கடித்த தெரு நாய்; மெத்தனத்தில் நகராட்சி
ADDED : டிச 02, 2024 05:10 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் ஒரே நாளில் தெரு நாய் கடித்து 6 பேர் காயமடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக தெருக்களிலும் பஜார் பகுதிகளிலும் சுற்றித் திரிகிறது.
குப்பை, ஓட்டல்கள், கறிக்கடைகளில் வீசப்படும் கழிவுகளை தின்று கொழுத்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், மக்களையும் விரட்டி கடிக்கின்றன.
நாய்களை அப்புறப்படுத்த, கட்டுப்படுத்த நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கை இல்லை.
நேற்று புளியம்பட்டியை சேர்ந்த 8, 3 வயது சிறுவர்கள், ரோகிணி, 63, ஆகியோரை சுற்றி திரிந்த தெரு நாய் கடித்துள்ளது.
இதே போன்று டெலிபோன் ரோட்டில் 16, 10 வயது சிறுவர்கள் திருநகரத்தில் கலைச்செல்வன் 56, ஆகிய 3 பேரையும் தெரு நாய்கள் கடித்துள்ளது. மனிதர்களை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் இயங்க வேண்டும்.-