/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டில் வெளியே தெரியும் குடிநீர் குழாய் போக்குவரத்திற்கு இடையூறு, விபத்திற்கும் வாய்ப்பு

ADDED : மே 30, 2024 02:09 AM

சிவகாசி: சிவகாசி பைபாஸ் ரோட்டில் வால்வு தொட்டியின் பெரிய குழாய் நடு ரோட்டின் மேல் நீட்டி கொண்டிருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கிறது.
சிவகாசி பைபாஸ் ரோடு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீரை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து விடுவதற்காக பைபாஸ் ரோட்டின் அடியில் வால்வு தொட்டி உள்ளது. இந்நிலையில் இந்த தொட்டி மூடப்படாமல் இதன் பெரிய குழாய் நடு ரோட்டின் மேல் ஒரு அடி உயரத்திற்கு நீட்டிக்கொண்டு உள்ளது.
சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பைபாஸ் ரோடு வழியாகத்தான் வந்து செல்கின்றது. இதனால் இப்பகுதியில் எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும். .குழாய் வெளியே தெரியும் இடத்தின் அருகே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு இருப்பதால் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது.
இதனால் போக்குவரத்துக்கு அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. தவிர குழாய் கருப்பு நிறத்தில் இருப்பதால் இரவில் டூவீலரில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பெரிய வாகனங்கள் குழாயில் மோதி தள்ளாடுகின்றன. எனவே இங்கு உடனடியாக சரி செய்து தொட்டியை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.