/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அடிக்கடி விபத்து நடப்பதால் வளைவில் எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு

ADDED : ஆக 13, 2024 12:28 AM

காரியாபட்டி : மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் தோணுகால் அருகே குண்டாற்று பாலத்தில் ஆபத்தான வளைவு இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எச்சரிக்கை பலகை வைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது ரோடு படு மோசமாக இருக்கிறது. அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நிற்கின்றன. சீரமைப்பு பணிகள் செய்யாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காரியாபட்டி தோணுகால் அருகே குண்டாற்று பாலத்தில் அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் வழியில் ஆபத்தான வளைவு உள்ளது. எச்சரிக்கை பலகை இல்லாததால் வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் பாலத்திற்கு இடையில் உள்ள இடைவெளியில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி ஆற்றுக்குள் விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏராளமான விபத்து நடந்து பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் தொடராமல் இருக்க அங்கு எச்சரிக்கை பலகை வைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.