/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி வழிபாடு
/
ஸ்ரீவில்லிபுத்துார் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்துார் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்துார் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி வழிபாடு
ADDED : ஆக 17, 2024 12:51 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று ஆண்டாள் கோயிலில் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரிய மாரியம்மன் கோயிலில் காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், கூழ்காய்ச்சியும் பக்தர்களுக்கு வழங்கினர். இரவு 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் பட்டத்தரசி அம்மன், செண்பகத் தோப்பு பேச்சி அம்மன் மற்றும் பல்வேறு தெருக்களில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாத கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.
மேலும் வீடுகள் தோறும் பெண்கள் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டனர். தங்கள் வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, வீட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.