ADDED : ஜூலை 24, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழி ரமண மந்த்ராலயத்தில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு பாண லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
திருச்சுழி ரமணா மந்த்ராலயத்தில் ரமண மகரிஷி யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் உருவச் சிலை அமைக்கப்பட்டு அதன் கீழ் நர்மதை ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இப்பாணலிங்கத்திற்கு ஆடி பவுர்ணமி தினம், குரு பூர்ணிமா நாளை முன்னிட்டு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பக்தர்கள் திருவாசகம் முற்றோதல் படித்தனர். மந்த்ராலயத்தை நிறுவிய சத்யானந்த் மகராஜ் சாமியின் ஜீவ சமாதிக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

