/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீட் தேர்வில் ஆப்சென்ட் 131; ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள்
/
நீட் தேர்வில் ஆப்சென்ட் 131; ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள்
நீட் தேர்வில் ஆப்சென்ட் 131; ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள்
நீட் தேர்வில் ஆப்சென்ட் 131; ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள்
ADDED : மே 06, 2024 12:19 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் எழுத்து தேர்வில் 3462 மாணவர்களில் 131 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
விருதுநகர் கே.வி.எஸ்., ஆங்கில வழிப்பள்ளியில் 696 மாணவர்கள், பி.எஸ்., சிதம்பரம் நாடார் ஆங்கிலப்பள்ளியில் 576, அருப்புகோட்டை மினர்வா பப்ளிக் பள்ளியில் 504, ராம்கோ வித்யாலயா பள்ளியில் 480, ஏ.ஏ.ஏ., இன்டர்நேஷனல் பள்ளியில் 384, ராஜபாளையம் ஆறுமுகம் பழனிக்குரு மாடர்ன் பள்ளியில் 216, ஸ்ரீவில்லிப்புத்துார் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 606 மாணவர்கள் என மொத்தம் 3462 மாணவர்கள் நீட் எழுத்து தேர்வு எழுத 7 மையங்கள் ஒதுக்கப்பட்டது.
கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மாணவர்களின் நலனிற்காக தேர்வு மையங்கள் முன்பு ஆம்புலன்ஸ், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்வு மையங்கள் முன்பு மாணவர்கள் பெற்றோருடன் வந்து காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தயார் நிலையில் இருந்தனர்.
தேர்வு எழுத செல்லும் மாணவர்களை பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்ட அறைகளுக்கு அனுப்பி வைத்தனர். நீட் தேர்வானது மதியம் 2:00 மணிக்க துவங்கி மாலை 5:20 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்டத்தில் நேற்று நடந்த நீட் தேர்வில் பங்கேற்க 3462 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 3331 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இத்தேர்வில் 131 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.