/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் அசுர வேகத்தில் பறக்கும் மண் டிராக்டர்களால் விபத்து அச்சம் அசுர வேகத்தில் பறக்கும் மண் டிராக்டர்கள்

ADDED : செப் 04, 2024 01:08 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு ரோட்டில் மண் டிராக்டர்கள் அசுர வேகத்தில் செல்வதால் அவ்வழியாக செல்லும் மக்களும், வாகன ஓட்டிகளும் விபத்து அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டபெத்தான் கண்மாயில் மண் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் மண் அள்ளப்பட்டு செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதில் மண் லோடுடன் கம்மாபட்டி, இடையபட்டல் தெரு, ரைட்டன்பட்டி தெரு, குலாலர் தெரு வழியாக டிராக்டர்கள் அசுர வேகத்தில் செல்வதால் அவ்வழியாக பயணிக்கும் மாணவர்களும், முதியவர்களும், ரோட்டோரம் அமர்ந்திருக்கும் மக்களும் விபத்திற்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. முறையாக மண் அள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, விபரீத விபத்துக்கள் ஏற்படும் முன்பு அதிவேகத்தில் செல்லும் டிராக்டர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.