/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவிந்து வரும் இளநீர் மட்டை கழிவுகள்-- முடங்கியாறு நீர் ஆதாரம் பாதிப்பு

ADDED : மே 24, 2024 01:55 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றின் குறுக்கே முடங்கியாறு பாலம் அமைந்துள்ளது. கிருஷ்ணாபுரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில ஏற்கனவே அமைக்கப்பட்ட குப்பை கிடங்கு செயல்படாமல் உள்ளது.
இந்நிலையில் முடங்கியாறு பாலம் அருகே வரை 300 மீட்டர் ரோட்டோரம் கழிவுகளை கொட்டி குவித்துள்ளனர்.
அதிலும் தற்போது இளநீர் வியாபாரிகள் அதன் மட்டை கழிவுகளை கொண்டு வந்து குவித்து செல்கின்றனர்.
இம்மட்டைகள் கிருமிகளின் உற்பத்தி கேந்திரமாக மாறி துர்நாற்றத்துடன் மழை நேரத்தில் இதில் வழியும் கழிவுநீர் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்தி வருகிறது.
கழிவு மட்டைகளை அப்புறப்படுத்த நகராட்சி சார்பில் உரக்கூட ஏற்பாடு உள்ள நிலையில் ஆற்றை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.