/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொல்லம் --சென்னை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
/
கொல்லம் --சென்னை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கொல்லம் --சென்னை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கொல்லம் --சென்னை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ADDED : ஏப் 07, 2024 01:11 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, விருதுநகர், மதுரை வழியாக சென்னைக்கு இயங்கும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
கொல்லத்திலிருந்து தினமும் மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக அதிகாலை 3:05 மணிக்கு சென்னை சென்றடையும் வகையிலும், மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30 மணிக்கு கொல்லம் சென்றடையும் வகையிலும் எக்ஸ்பிரஸ் ரயில் 14 பெட்டிகளுடன் இயங்கி வருகிறது.
ரயில்பாதைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் புனலூர்- -செங்கோட்டை வழித்தடத்தில் 24 பெட்டிகளுடன் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு எர்ணாகுளம்- -வேளாங்கண்ணி ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
தற்போது சென்னை - கொல்லம் ரயிலிலும் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. ஏப். 9 முதல் சென்னையில் இருந்து புறப்படும் ரயிலிலும், ஏப்ரல் 10 முதல் கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயிலிலும் கூடுதலாக ஒரு ஏசி மூன்றாம் வகுப்பு, 2 ஸ்லிப்பர் வகுப்பு பெட்டிகள் இணைத்து 17 பெட்டிகளுடன் ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு வெளியிட்டது

