/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க எதிர்பார்ப்பு
/
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 22, 2024 02:14 AM
காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு டாக்டர் பரிசோதனை செய்வதால், நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கூடுதல் டாக்டர்களை நியமிக்கநடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 66 படுக்கை வசதிகள், எக்ஸ்ரே உள்ளிட்ட கருவிகள் உள்ளன. 5 டாக்டர்கள் இருக்க வேண்டும். தற்போது 3 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஒருவர் மருத்துவ விடுப்பிலும், மற்றொருவர் தொடர் விடுப்பிலும் உள்ளனர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் 600க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். காலையில் நீண்ட வரிசையில் கால் கடுக்க நிற்கின்றனர். சுழற்சி முறையில் 3 டாக்டர்கள் பணிக்கு வருகின்றனர். காலையில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பரிசோதனை செய்வதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. ஆத்திர அவசரத்திற்கு டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறுவது கடினமாக உள்ளது. ஒரே ஒரு டாக்டரால் தொடர்ந்து அனைத்து நோயாளிகளையும் பார்த்து பரிசோதனை செய்வது இயலாத காரியம்.
தற்போது பருவ மழை பெய்து வருவதால் காய்ச்சல், இருமல் சளி உள்ளிட்ட பிரச்னைகளால் அதிகளவில் நோயாளிகள் வரக்கூடும். இதனை கருத்தில் கொண்டு கூடுதல் டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளன.கூடுதல் படுக்கை வசதிகளுடன் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. கூடுதல் டெக்னீசியன்கள், பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.