/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., ரத வீதிகளில் தேவை கூடுதல் சுகாதார வசதிகள்
/
ஸ்ரீவி., ரத வீதிகளில் தேவை கூடுதல் சுகாதார வசதிகள்
ஸ்ரீவி., ரத வீதிகளில் தேவை கூடுதல் சுகாதார வசதிகள்
ஸ்ரீவி., ரத வீதிகளில் தேவை கூடுதல் சுகாதார வசதிகள்
ADDED : ஆக 05, 2024 07:25 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட நாளன்று பல ஆயிரம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கும் நிலையில் ரத வீதிகளில் போதிய அளவிற்கு நடமாடும் சுகாதார வாகன வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆண்டாள் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது கோயில் முன்பகுதியில் ஒரு சுகாதார வளாகமும், நகராட்சி அலுவலகம் அருகே ஒரு சுகாதார வளாகம் மட்டுமே உள்ளது. இது போதுமானதாக இல்லை. மேலும் அதிகளவில் மக்கள் வந்து செல்லும் கீழ ரத வீதியில் எந்தவித சுகாதார வளாக வசதியும் இல்லை. இதனால் வெளியூர் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுகாதார வளாகங்களை தேடி அலையும் நிலை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஐந்து கருட சேவையின் போது ஏராளமான பக்தர்கள் வந்திருந்த நிலையில், போதிய சுகாதார வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் தேரோட்ட நாளன்று 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் போதிய அளவிற்கு நடமாடும் சுகாதார வளாக வாகனங்களை நிறுத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென ஆண்டாள் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.