/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு விபத்து குறைக்க கூடுதல் தாசில்தார் வருவாய்த்துறையினர் எதிர்பார்ப்பு
/
பட்டாசு விபத்து குறைக்க கூடுதல் தாசில்தார் வருவாய்த்துறையினர் எதிர்பார்ப்பு
பட்டாசு விபத்து குறைக்க கூடுதல் தாசில்தார் வருவாய்த்துறையினர் எதிர்பார்ப்பு
பட்டாசு விபத்து குறைக்க கூடுதல் தாசில்தார் வருவாய்த்துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : செப் 03, 2024 02:25 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விபத்துக்களை குறைக்க ஆலைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மற்றொரு தாசில்தார் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என வருவாய்த்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் 1080 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இதில் நாக்பூர், சென்னை உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் 775, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற ஆலைகள் 305 உள்ளன. 1990 காலகட்டங்களில் 500 பட்டாசு ஆலைகளுக்காக தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளின் தாசில்தார் பணியிடம் ஒன்று மட்டும் உருவாக்கப்பட்டது.
இந்த தாசில்தாரின் பணி ஆலைகளை ஆய்வு செய்வது, விதிமீறல்களை கண்டறிவது, உரிமத்திற்கு பரிந்துரைப்பது, பட்டாசு கடைகள் நிலத்தை ஒப்பீடு செய்து அனுமதிப்பது போன்றவை.
தற்போது பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து விட்டது.
தீபாவளி நெருங்கும் நிலையில் தொடர் ஆய்வுகள் நடத்த திணறும் நிலை தான் உள்ளது. இதனால் சில இடங்களில் ஆய்வில் மந்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது.விபத்துக்களை குறைக்க பட்டாசு ஆலை தாசில்தார் பணியிடத்தை கூடுதலாக நியமிப்பது அவசியமாக உள்ளது.
மாவட்ட அமைச்சரே வருவாய்த்துறை அமைச்சராக இருப்பதால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வருவாய்த்துறையினர் கூறினர்.
தீபாவளி நெருங்கும் நிலையில் தொடர் ஆய்வுகள் நடத்த திணறும் நிலை தான் உள்ளது. இதனால் சில இடங்களில் ஆய்வில் மந்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது.