/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூடுதல் டவுன் பஸ்கள் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
கூடுதல் டவுன் பஸ்கள் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : செப் 05, 2024 04:04 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சிவகாசிக்கு காலை நேரத்தில் கூடுதலாக டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என விருதுநகர் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ. மான்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது சிவகாசியில் ரயில்வே பால பணிகள் நடப்பதால் ஸ்ரீவி.,யில் இருந்து சிவகாசி செல்லும் பஸ்கள் சென்று வருவதில்மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் தினமும் காலை 7:30 முதல் 10:00 மணி வரை வேலைக்கு செல்வோர், மாணவர்கள், அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே காலை நேரத்தில் கூடுதலாக சிவகாசிக்கு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும். குறிப்பாக கல்லுாரி மாணவர்கள் சிரமம் இன்றி பயணிக்க உதவும் வகையில் ரிசர்வ் லைன் வரை சென்று திரும்பும் வகையில் ஒரு சில பஸ்களை மாற்றி இயக்க வேண்டும் என கேட்டுள்ளார்.