/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அ.தி.மு.க., வேட்பாளர்கள் அடையாளம் தெரியாதவர்கள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு
/
அ.தி.மு.க., வேட்பாளர்கள் அடையாளம் தெரியாதவர்கள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு
அ.தி.மு.க., வேட்பாளர்கள் அடையாளம் தெரியாதவர்கள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு
அ.தி.மு.க., வேட்பாளர்கள் அடையாளம் தெரியாதவர்கள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு
ADDED : மார் 22, 2024 04:20 AM
விருதுநகர்: அ.தி.மு.க, வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் யார் என்று கூட அடையாளம் தெரியவில்லை என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ், சிவகாசி மாநாகராட்சி மேயர் சங்கீதா, நகராட்சி தலைவர் மாதவன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் நான்கு அணிகள் போட்டிபோடுவதால் ஓட்டுக்கள் பிரியும். ஆனால் தி.மு.க., வின் ஓட்டுகள் சிந்தாமல் சிதறமால் அப்படியே உள்ளது. அ.தி.மு.க., வில் வேட்பாளரை நிறுத்துவதற்கே ஆள் இல்லை. அவர்களின் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் யார் என்று கூட அடையாளம் தெரியவில்லை. பா.ஜ.,வில் இன்றுவரை கூட்டணி முடிவுக்கு வரவில்லை. நாம் தமிழர் கட்சி சீமான் தனியாக உள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க., வெற்றி பெற்றால் தான் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து நிற்க அஞ்சுவார்கள், என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது முறையாக தி.மு.க., கூட்டணியை உருவாக்கியுள்ளார். அமைச்சர் உதயநிதி தன்னுடைய முதல் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை மார்ச் 23 ல் திருச்சுழி, காரியப்பட்டி, அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து துவக்கி திருமங்கலம் செல்கிறார், என்றார்.

