/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., பொதுக்கூட்ட உணவால் வாந்தி, மயக்கம் ஆறுதல் கூறிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,

ADDED : செப் 14, 2024 02:28 AM

விருதுநகர்:மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வில்லுாரில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உதயகுமார், தி.மு.க., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களைபார்க்க மணிமாறன் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:
நேற்று தி.மு.க., தெற்கு ஒன்றியம் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. அதில் உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை பெற்றவர்கள்மாலை வரைக்கும் வைத்திருந்து பள்ளியில் இருந்து மாணவர்கள் வந்ததும் கொடுத்துள்ளனர். இதனால் உடலில்சேராமல் வயிற்று போக்கு, வாந்தி ஏற்பட்டுஉள்ளது. மருத்துவரிடம் விசாரித்தோம். நலமடைந்து மாலைக்குள் வீடு திரும்புவதாக கூறினர் என்றார்.
அதை தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்த திருமங்கலம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உதயகுமார் நலம் விசாரித்தார். தேவையான சிகிச்சைகளை உடனுக்குடன் வழங்கவும் டாக்டர்களை கேட்டுக்கொண்டார்.