/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அறிவுரை
/
தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அறிவுரை
தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அறிவுரை
தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அறிவுரை
ADDED : ஏப் 17, 2024 06:10 AM
விருதுநகர் : தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மைவிழிச்செல்வி செய்திக்குறிப்பு: ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட அனைத்து பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்கள், தொழிலாளர்களுக்கும், ஓட்டளிக்கும் நாளான ஏப். 19ல் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
கர்நாடக அரசு லோக்சபா தேர்தலானது ஏப். 26, மே7 ஆகிய 2 நாட்கள் நடப்பதால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனைத்து வகை பணியாளர்களுக்கும் ஓட்டளிக்க சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.
விடுமுறை அளிக்கப்படாதது தொடர்பான புகார்களை அலுவலக தொலைபேசி எண்-04562 - 252 130, 94453 98763, 98652 54003, 89398 62505, 91594 43377ஆகிய எண்களில் தெரிவிக்கலாம், என்றார்.

