நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் மதுரை மண்டல பொது இன்ஸ்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தினருக்கு மதுரை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனைக் கூட்டம் சங்க துணைத் தலைவர் அசோகன் தலைமையில் நடந்தது.
இதில் செயற்குழு உறுப்பினர்கள் ஜவஹர், பாபு, தலைவர் கோபால்ராஜ், மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் நீலக்கண்ணன், டாக்டர்கள் செந்தில்குமார், சக்திவேல், கார்த்திக்குமார், சுகன்யா உள்பட பலர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

