/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணிகள் முடிந்தும் தெருக்கள் சிதைப்பு அவலத்தில் குடியிருப்போர்
/
பணிகள் முடிந்தும் தெருக்கள் சிதைப்பு அவலத்தில் குடியிருப்போர்
பணிகள் முடிந்தும் தெருக்கள் சிதைப்பு அவலத்தில் குடியிருப்போர்
பணிகள் முடிந்தும் தெருக்கள் சிதைப்பு அவலத்தில் குடியிருப்போர்
ADDED : ஆக 12, 2024 05:08 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டி பணிகள் முடிந்து புதிதாக போடப்பட்ட ரோடுகள் மீண்டும் இணைப்பு பணிகளுக்காக சிதைக்கப்பட்டு வருவதை கண்டு மக்கள் சங்கடத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ராஜபாளையம் நகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு முன் அம்ருத் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் பணிகளுக்காக மெயின் ரோடு சந்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் முழுவதுமாக தோண்டி பணிகள் நடந்தது.
துவங்கியதில் இருந்து தற்போது வரை மேடு பள்ளங்களாக இருந்து வந்ததில் மக்கள் பாதிக்கப்பட்டு விபத்திற்கு உள்ளாகி வந்தனர். மக்களின் தொடர் கோரிக்கையால் மெயின் ரோடு, சந்து பகுதிகள் என 90 சதவீத பணிகள் மட்டும் முடிந்துள்ளது.
ஏற்கனவே போடப்பட்ட பேவர் பிளாக், சிமென்ட், தார் ரோடுகளில் பாதாள சாக்கடை வீடுகளுக்கு இணைப்பு, தாமிரபரணி குடிநீர் குழாய் சேதம் என மீண்டும் தோண்டப்பட்டு அனைத்து பகுதிகளிலும் மேடு பள்ளங்களாக மாறி வருகிறது.
புதிதாக போட்ட ரோடுகள் தோண்டப்பட்டு மீண்டும் சரி செய்யாமல் விட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். ஆண்டு கணக்கில் மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கிய தெருக்களின் மேடு பள்ளங்கள் சீரமைக்கப்பட்ட பின் தற்போது மீண்டும் தோண்டி தடைகள் ஏற்படுத்தி வருவதை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகமும், நகராட்சியும் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

