/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊருணியில் ஆகாயத்தாமரைகள் துார்வார கோரிக்கை
/
ஊருணியில் ஆகாயத்தாமரைகள் துார்வார கோரிக்கை
ADDED : மே 11, 2024 11:04 PM

சிவகாசி:சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியில் பயன்பாட்டில் உள்ள ஊருணியில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கழிவு நீர் கலக்காமல் தடுத்து துார்வார வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியில் ஊருக்கு மத்தியில் ஊருணி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் கிராம மக்கள் ஊருணியைத்தான் குளிக்க, துணி துவைக்க என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
ஏனெனில் மழைக்காலங்களில் ஊருணிக்கு தண்ணீர் வந்து வற்றாமல்உள்ளது. தற்போது வரை ஊருணி இதற்கு பயன்பட்டு வருகின்றது. ஆனால் ஊருணியில் பெரும்பான்மையான பகுதிகளில் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளது.
மேலும் கழிவு நீரும் ஊருணியில்தான் கலக்கின்றது. இதெல்லாம் தண்ணீர் நிறமே மாறிவிட்டது. ஆனாலும் வேறு வழியின்றி ஊருணியை பயன்படுத்துகின்ற மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே ஊருணியில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி துார்வார வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.