/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேளாண் கருவிகளின் பராமரிப்பு மேளா
/
வேளாண் கருவிகளின் பராமரிப்பு மேளா
ADDED : ஜூலை 27, 2024 06:17 AM
விருதுநகர் : விருதுநகரில் வேளாண் கருவிகளின் பராமரிப்பு குறித்த இலவச கட்டணமில்லா பராமரிப்பு மேளா நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார். டிராக்டர்களை பராமரிக்கும் வழிமுறைகள், வேளாண் கருவிகளை இயக்குதல், பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, உயவுப் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்டவை பற்றியும் விவசாயிகள் அனைவரும் அறிந்து கொண்டனர். கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்கள் டிராக்டர்களுடன் உபகரணங்களைப் பொருத்தி இயக்கிடும் செயல்முறை விளக்கத்தினை செய்து காண்பித்தனர். வேளாண் பொறியியல்துறையில் பணித்தளத்திலேயே பழுதுநீக்கம் செய்து தரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் பங்கேற்றனர்.