/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரும்புகை வாகனங்களால் காற்று மாசு தீராத நுரையீரல் பிரச்னைக்கும் வழி
/
கரும்புகை வாகனங்களால் காற்று மாசு தீராத நுரையீரல் பிரச்னைக்கும் வழி
கரும்புகை வாகனங்களால் காற்று மாசு தீராத நுரையீரல் பிரச்னைக்கும் வழி
கரும்புகை வாகனங்களால் காற்று மாசு தீராத நுரையீரல் பிரச்னைக்கும் வழி
ADDED : மே 30, 2024 02:03 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கரும்புகை கக்கும் வாகனங்களால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. தீராத நுரையீரல் பிரச்னைக்கும் வழி ஏற்படுகிறது. ஆகவே வட்டார போக்குவரத்து துறையினர் அதீத கரும்புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மாவட்டத்தில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன. தற்போது ஒரு வாகனத்திற்கு சராசரியாக 15 ஆண்டுகள் ஆயுட்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கனரக வாகனங்களில் அதீதமாக ஏற்றப்படும் எடை காரணமாக 5 ஆண்டுகளிலே இன்ஜின் பழுதை சந்திக்கின்றன. இதனால் வெளியேறும் புகையின் அளவும் அதிகமாகின்றன.
வாகனங்களின் புகையில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இது சுவாச பிரச்னையில் துவங்கி, காற்று மாசை அதிகப்படுத்தி மனிதர்களின் நுரையீரலை பலவீனப்படுத்துகிறது. வட்டார போக்குவரத்து துறை மூலம் மாசு கட்டுப்பாட்டு சான்று வாங்கினாலும் அதை முறையாக ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிப்பது கிடையாது.
மேலும் பல அரசு பஸ்களே கரும்புகை கக்கும் வாகனங்களாக உள்ளன. பொதுப்போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அரசு வாகனங்களே இந்த நிலையில் இருப்பது மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அலட்சியத்தை ஏற்படுத்துகிறது.
வெறும் அபராதம் தானே என வாகன புகை பரிசோதனையை தாமதமாக செய்கின்றன்றனர். ஆகவே வட்டார போக்குவரத்து துறையினர் புகை கக்கும் வாகனங்களை கண்டறிந்து உடனடியாக அதை சரி செய்ய அறிவுறுத்த வேண்டும்.