ADDED : ஏப் 06, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகரில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இணைய வழியில் சீரற்றமயமாக்கல் முறையில் ஓட்டுச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும் பணி தேர்தல் பொது பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.
மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு ஏப்.7ல் அந்தந்த தொகுதிகளில் நடக்கிறது.

