/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூன்று ஆண்டாக சுத்தம் செய்யாத மேல்நிலைத் தொட்டி
/
மூன்று ஆண்டாக சுத்தம் செய்யாத மேல்நிலைத் தொட்டி
ADDED : ஆக 25, 2024 04:19 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே வடக்கு நத்தம் கிராமத்தில் மேல்நிலைத் தொட்டி 3 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்களும் அழுக்கும் கலந்து வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு நத்தம் ஊராட்சிக்குட்பட்டது வடக்கு நத்தம் கிராமம். இங்கு ஊராட்சி மூலம் போர்வல் அமைத்து, மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் தேக்கி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக மக்கள் புகார் கூறுகின்றனர். குழாயில் வரும் குடிநீரில் அழுக்கும், பாசம், புழுக்கள் வருவதாக மக்கள் புலம்புகின்றனர்.
பாதுகாக்கப்பட்ட குடிநீரை ஊராட்சி நிர்வாகம் வழங்குவது இல்லை. குடிநீரும் உப்பு சுவை உள்ளதாகவும் சுகாதாரம் இல்லாமலும் இருக்கிறது.
பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைக்க வேண்டும் என, கிராமத்தினர் விரும்புகின்றனர்.