/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் கர்ப்பிணிகள், தாய்மாரின் கருவிழிகளை செல்போனில் பதிவு செய்யும் டி.எச்.ஆர். முறையை கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் எஸ்தர்ராணி தலைமை வகித்தார். செயலாளர் பாண்டியம்மாள் முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் சத்யா பேசினார். போராட்டத்தை ஆதரித்து சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகிகள் சாராள், ராமர், தேவா பேசினர்.