/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வவ்வால், மான்கள் நடமாடும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
/
வவ்வால், மான்கள் நடமாடும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
வவ்வால், மான்கள் நடமாடும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
வவ்வால், மான்கள் நடமாடும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 04, 2024 01:11 AM
காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் வவ்வால், மான்கள் நடமாடும் பகுதிகளில் இடையூறு ஏற்படும் சம்பவங்கள் நடைபெறுவதால் வனத்துறை சார்பாக எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டியில் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஆலமரத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக பழந்திண்ணி வவ்வால்கள் தங்கி வருகின்றன. கம்பம், தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இறை தேடிச் சென்று மீண்டும் இங்கு வந்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனை போலீசாரும் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருவதோடு, அப்பகுதியில் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடிக்க கூடாது என அறிவுறுத்தினர். அறிந்தவர்கள் இதனை கடைப்பிடிக்கின்றனர்.
அதேபோல் கே. கரிசல்குளம் கண்மாய் பகுதியில் ஏராளமான மான்கள் நடமாடுகின்றன. அவ்வப்போது இறை தேடி பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன.
மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை கடக்க முற்படும் போது, அதிவேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு பலியாகின்றன. அறிவிப்பு பலகை இல்லாததால் வாகனங்கள் அப்பகுதியில் அதிவேகமாக வருகின்றன.
எனவே போலீஸ் ஸ்டேஷன், கே.கரிசல்குளம் பகுதியில் வனத்துறை சார்பாக எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்தப்பட்டது. 4 மாதங்களுக்கு முன் போலீஸ் ஸ்டேஷன், கே. கரிசல்குளம் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்படும் என தெரிவித்ததோடு சரி, இதுவரை வைக்கப்படவில்லை.
அடிக்கடி வவ்வால்களுக்கு தொந்தரவு ஏற்படுவதுடன், மான்கள் வாகனங்களில் அடிபடுகின்றன.
இதனை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டியது அவசியமாவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.