ADDED : பிப் 23, 2025 04:30 AM
சிவகாசி: டெல்லியில் நடந்த 76 வது குடியரசு தின விழாவில், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 127 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 40 நாட்கள் பயிற்சி பெற்றனர்.
இதில் சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி கணிப்பொறியியல் மாணவர் ராகுல் ராஜா, பயோ மெடிக்கல் துறை மாணவி ஜனனி ஆகியோர் அணி வகுப்பிலும், கலை நிகழ்ச்சிகளும் பங்கேற்றனர். இவர்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் குரு பீர்பால் சிங், லெப்டினன்ட் கர்னல் அனுஜ் மான் ஆகியோர் சான்றிதழ், கேடயம் வழங்கினர், மேலும் பிரதமர் மாளிகையில் நடந்த விருந்தில் இந்த மாணவர்கள் பங்கேற்று பிரதமர் மோடியிடம் கலந்துரையாடினர்.
இந்த மாணவர்களை கல்லுாரி தாளாளர் சோலைசாமி, இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி, கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி, என்.சி.சி., ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ், துறை தலைவர்கள் பாராட்டினார்.

