ADDED : ஜூலை 17, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 18-
மதுரை சகோதய பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் மண்டல அளவிலான எறிபந்து போட்டி ராஜபாளையம் ஜோசப் இண்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
இதில் ஸ்ரீவி லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த 90க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதில். 12, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களும், மாணவிகளும் முதலிடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடமும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தொடர்ந்து மூன்று ஆண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
சாதனை மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி, பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
