/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பில் அல்லாடும் அருப்புக்கோட்டை
/
ஆக்கிரமிப்பில் அல்லாடும் அருப்புக்கோட்டை
ADDED : மே 19, 2024 05:21 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் உள்ள தெற்கு தெரு பகுதி ஆக்கிரமிப்பினால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடைஞ்சலாக உள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சி 31 வது வார்டை சேர்ந்தது தெற்கு தெரு. இங்கு மருத்துவமனைகள், கேன் சென்டர்கள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், பியூட்டி பார்லர்கள், ஓட்டல்கள், பள்ளிகள் உள்ளன. எந்த நேரமும் இந்தப் பகுதி போக்குவரத்து மிகுந்ததாக இருக்கும். நகராட்சி பழைய , புதிய பஸ் ஸ்டாண்ட்களுக்கு இந்த பகுதியில் உள்ள ரோட்டை பயன்படுத்தி தான் செல்ல வேண்டும். ஒரு வழி பாதையான இதில் 2 பஸ்கள் தாராளமாகச் செல்லும் வகையில் ரோடு அகலமாக இருந்தது.
நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தெற்கு தெரு பகுதியில் ரோட்டின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரு பஸ் செல்வதற்கு கூட சிரமப்பட்டு தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.
ரோட்டின் ஓரங்களில் உள்ள கடைக்காரர்கள் ரோடு வரை தங்கள் கடை பொருட்களை பரப்பி வைத்துள்ளனர். பெரிய அளவிலான கேபிள் சுருள்களை ரோட்டில் அருகில் வைத்துள்ளனர். இவை உருண்டு விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் டூ வீலரில் செல்வோர் பயந்து கொண்டே இந்த ரோட்டை கடக்க வேண்டி உள்ளது. ஒரு பக்கம் ரோட்டோர ஆக்கிரமிப்பு மற்றொரு பக்கம் கட்டுமான தளவாட பொருட்கள் என தெற்கு தெரு பகுதியில் நுழைய முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது.
இதுகுறித்து நகராட்சியில் உள்ள நகர அமைப்பு பிரிவு எதையும் கண்டு கொள்வதில்லை. நெடுஞ்சாலைத் துறைக்கு கட்டுப்பாட்டில் ரோடு இருப்பதால் அவர்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தெற்கு தெரு பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தினேஷ்: அருப்புக்கோட்டை நகரில் தெற்குத் தெரு உட்பட, அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் ஜூன் 10ல் முழுவதுமாக அகற்றப்படும். ஏற்கனவே இது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும்.

