/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு 40 நாள் தவக்காலம் துவக்கம்
/
சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு 40 நாள் தவக்காலம் துவக்கம்
சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு 40 நாள் தவக்காலம் துவக்கம்
சர்ச்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு 40 நாள் தவக்காலம் துவக்கம்
ADDED : மார் 06, 2025 03:20 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சர்ச்களில் சாம்பல் புதன் முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையடுத்து 40 நாள் தவக்காலம் துவங்கியது.
விருதுநகர் இன்னாசியார் சர்ச், பாண்டியன் நகர் சவேரியார் சர்ச், நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச், ஆர்.ஆர்.நகர், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்களில் பாதிரியார்கள் அருள்ராயன், லாரன்ஸ், உதவி பாதிரியார்கள் தேவராஜ், மரிய ஜான் பிராங்க்ளின், எஸ்.எப்.எஸ்., மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆரோக்கியம், பாதிரியார்கள் அந்தோணிசாமி, பீட்டர்ராய், உதவி பாதிரியார் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலம் துவங்கி வைக்கப்பட்டது. அதன் பின் திருப்பலி, மறையுரை நடந்தது.
சாத்துார் திருஇருதய ஆண்டவர் சர்ச், ஒத்தையால் குழந்தை இயேசு சர்ச், சிவகாசி லுார்து அன்னை சர்ச், திருத்தங்கல் அந்தோணியார் சர்ச், அருப்புக்கோட்டை சூசையப்பர் சர்ச்களில் பாதிரியார்கள் காந்தி, ஜான் மில்டன், ஜான் மார்ட்டின், பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், அந்தோணி பாக்கியம்ஆகியோர் தலைமையில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
மேலும் மார்ச் 7 முதல் ஏப். 18 புனித வெள்ளி வரை 7 வார வெள்ளிக் கிழமைகளில் சிலுவைப்பாதை, 40 நாட்கள் தவக்கால வழிபாடுகள் நடக்கிறது.
அதன் பின் ஏப். 20ல்இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.