/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் வாறுகால் துார்வாரப்பட்டது
/
சிவகாசியில் வாறுகால் துார்வாரப்பட்டது
ADDED : ஆக 04, 2024 06:20 AM

சிவகாசி : சிவகாசி தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் ஒரு கி. மீ., துாரத்திற்கு இருபுறமும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் அமைக்கப்பட்டது. தற்போது இந்த வாறுகால் ரோட்டின் இரு புறமுமே பெரும்பான்மையான இடங்களில் சேதம் அடைந்துள்ளது.
ஒரு சில இடங்களில் செடிகள் முளைத்து துார்ந்தும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் அடைபட்டும் இருந்தது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் வாறுகாலில் செல்லாமல் வெளியேறி ரோட்டில் ஓடி போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தியது. கடந்த மழை காலங்களில் வாறுகால் துார்வாரப்படாததால் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டிலேயே தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது.
வாறுகாலை துார்வாரி மழைநீர் வெளியேறிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சிறிய மணல் அள்ளும் இயந்திரம் மூலம் வாறுகால் துார்வாரப்பட்டது.