/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்
/
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்
ADDED : ஆக 23, 2024 03:23 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் சுரைக்காய் பட்டி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி 48, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர். ராஜபாளையம் குமரன் தெருவில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார்.
இவர் பஞ்சு மார்க்கெட்டில் உள்ள டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் வேல்முருகன் பயிற்சி பள்ளிக்கு வரும் பயிற்சியாளர்களிடமும், வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் வரும் சேவை தாரர்களிடமும் காரணம் இன்றி பணம் வசூலிப்பதாக தகவல் வந்ததால் அழைத்து கண்டித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக நேற்று முன்தினம் இரவு குருமூர்த்தியின் அலுவலகத்தில் வேல்முருகன் உள்ளிட்ட 5 பேர் நுழைந்து அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக வடக்கு போலீசார் கண்ணன் 43, என்பவரை கைது செய்து வேல்முருகன் உள்ளிட்ட 4 பேரை தேடுகின்றனர்.