ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 250 வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். செயலாளர் சக்தி மகேஸ்வரி வரவேற்றார். எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய கரிசல் மண்ணில் மறக்க முடியாத மனிதர்கள் நூல் குறித்து பேராசிரியர் சிவனேசன், எழுத்தாளர் அன்னக்கொடி, நூலக கமிட்டி உறுப்பினர் ராஜாராம் விமர்சனம் செய்தனர்.
நூலாசிரியர் பிரபாகரன் ஏற்புரைற்றினார்.
பின்னர் கோதையூர் மணியன் எழுதிய தமிழ்நாட்டு வளமும், தமிழர் நலமும் என்ற கட்டுரை தொகுப்பை மதுரை சரக ஊர்க்காவல் படை தலைவர் ராம்குமார் ராஜா வெளியிட, கவிஞர் சுரா பெற்றுக் கொண்டார்.
புலவர் பாலகிருஷ்ணன், காளியப்பன், சிவனணனைந்த பெருமாள் வாழ்த்தினர்.
கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பென்னிங்டன் கமிட்டி செயலாளர் சண்முகநாதன், தொண்டு நிறுவன நிர்வாகி ராமராஜ் பரிசுகளை வழங்கினர்.
சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் கோதண்டம், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.அடைக்கலம் நன்றி கூறினார்.