/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
/
சிவன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
ADDED : செப் 06, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி பிரமோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது.
நேற்று முன்தினம் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று கொடிப்பட்டம் விருதுநகரில் மெயின் பஜார், மேலத்தெரு, ரதவீதிகளை சுற்றி வந்து கொடியேற்றம் நடந்தது. சுவாமி திருவிழா மண்டபத்தில் எழுந்தருளினார்.
விழா நாட்களில் இரவு அன்ன வாகனம், கைலாச வாகனம், நந்தி, குதிரை, சிங்கம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவார். செப்., 4 முதல் 16 வரை சுவாமி வீதி உலா,நடக்கிறது செப்., 12ல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை சொக்கநாத சுவாமி கோயில் பிரமோற்ஸவ கட்டளை செய்தது.