நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் பிரம்மா குமாரிகள் வித்யாலயத்தின் சார்பாக ஆன்லைனில் சிவனும் நானும் என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடந்தது. இப்போட்டியில் தமிழகம் முழுவதிலிமிருந்து 3 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். கலந்து கொண்டவர்களுக்கு விருதுநகர் பிரம்ம குமாரிகள் கிளையில் பரிசளிப்பு விழா நடந்தது.
கிளையின் பொறுப்பு சகோதரி பிரம்ம குமாரி செல்வி பேசினார். சவுடாம்பிகா பள்ளி தலைமை ஆசரியிர் பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகியோர் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கேடயம், பதக்கம், சான்றுகளை வழங்கினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படது. பிரம்மா குமாரி தீபா விழாவை ஒருங்கிணைத்தார்.