ADDED : ஆக 07, 2024 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி, அன்பால் இணைவோம் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 65 மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது.
மாநகராட்சி மேயர் சங்கீதா தலைமை வகித்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, விருது, சான்றிதழ் வழங்கினார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, தொழிலதிபர் கருப்பையா முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் வெயில் ராஜ், சரவணகுமார், ராஜேஷ் உள்ளிட்ட கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அன்பால் இணைவோம் அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்குமார் செய்தார்.