நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகரில் விருதை விழுதுகள், மித்ரு அறக்கட்டளை சார்பில் 6 வகுப்பு முதல் பிளஸ் 2 பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கல்வி பயில முடியாத 25 மாணவர்களை அறக்கட்டளை மூலம் முதற்கட்டமாக 1 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் 50 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பத்து சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டது.
இதில் ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., மணிவண்ணன், பேராசிரியர் ஜெயகுமரன், எஸ்.ஐ., அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.