/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரிக்கு விருது
/
சிவகாசி பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரிக்கு விருது
சிவகாசி பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரிக்கு விருது
சிவகாசி பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரிக்கு விருது
ADDED : ஆக 30, 2024 05:42 AM
சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்.,ஆர். பொறியியல் கல்லுாரிக்கு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தந்தமைக்காக முதன்மை கல்லுாரியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரி நிறுவன தலைவர்களுடன் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
மதுரை கலெக்டர் சங்கீதா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குனர் இன்னசன்ட் திவ்யா தலைமை வகித்தனர். தென் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாவட்டங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பொறியியல், கலை மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் கலந்து கொண்டன.
இதில் விருதுநகர் மாவட்டத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தந்த சிவகாசி பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதன்மை கல்லுாரியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி, முதல்வர் ஆகியோர் விருது பெறுவதற்கு சிறப்பாக பணியாற்றிய பயிற்சி , வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர் சத்யா, பேராசிரியர்களை பாராட்டினர்.