ADDED : ஜூன் 18, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவர்களது பாதுகாப்பு, கண்ணியத்தை காக்க சமூகநலத்துறை சார்பில் ராஜபாளையம் சேத்துார் சேவுக பாண்டியன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தாசில்தார் ராஜிவ் காந்தி, நகராட்சி மகிஷனர் நாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் திலகம் தலைமை வகித்தனர். பள்ளிகளில் நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவகத்திலும் நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
