ADDED : ஆக 11, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் கவுன்சிலிங் செல் சார்பில் மாணவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, முதலுதவி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார்.
கல்லுாரி செயலாளர் சங்கரசேகரன் தலைமை வகித்தார்.
முதல்வர் செல்லத்தாய் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். அருப்புக்கோட்டை 108 ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப வல்லுனர்கள் அன்புராஜ், அருள்முருகன் பேசினர்.
கர்ப்பிணிகளுக்கு பிரசவகால முதலுதவி, சாலை விபத்து, விஷக்கடி முதலுதவி பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பேராசிரியர்கள் பகவதியப்பன், வனிதா கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் சத்தியா நன்றி கூறினார்.-