ADDED : ஆக 10, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்பணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பர திறை வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு தொடர்பான குறும்படங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்தார்.
மழைநீர் சேகரிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கென்னடி உட்பட பலர் பங்கேற்றனர்.