ADDED : செப் 05, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரி ரெட் ரிப்பன் கிளப், மாணவர் சேவை மையம், நுண்ணுயிரியல் துறை, விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் போதை ஒழிப்பு, எச்.ஐ.வி., நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
ஊர்வலம் தேசபந்து மைதானத்தில் துவங்கி எம்.ஜி.ஆர்., சிலை வரை நடந்தது. இதில் கல்லுாரிதலைவர் சம்பத்குமார், உப தலைவர்கள் ராமசாமி, டெய்ஸிராணி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.