தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூன் 07, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

இதனை துவக்கி வைத்து புலிகள் காப்பகத் துணை இயக்குனர் ரவிமீனா பேசியதாவது: மாணவர்கள் அனைவரும் பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து பாரம்பரிய மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பழக வேண்டும்.

மின்சார தேவையை குறைக்கும் பொருட்டு தேவையற்ற இடங்களில் செயல்படும் மின் சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும். காற்று மாசுபாட்டை குறைக்க பொது போக்குவரத்து வாகனங்களையும், பள்ளி மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு சைக்கிள்களையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us